கொஞ்சம் க்ராப்பிங்,கான்ட்ராஸ்ட் அட்ஜ்ஸ்மென்ட்...அப்புறம் பிரைட்னஸ் அட்ஜ்ஸ்மென்ட். அவ்வளவுதான்! கூடிய விரைவில் இந்த தொழில்நுட்ப ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதங்களோட வருவேன்!
Wednesday, July 9, 2008
PiT ஜூலை-2008- I
Sunday, July 6, 2008
மேக்ரோ லென்ஸும் ரிவர்ஸ் லென்ஸ் நுட்பமும்
சரி இந்தப் பதிவிற்கு வருவோம். நம்முடைய சாதாரண காமிராவில் மிக நெருக்கமாக ஒரு பொருளை தெளிவாக எடுக்க முடியாது. காரணம் காமிராவில் உள்ள லென்ஸின் குறைந்த பட்ச குவியத்தூரம் 30 CM என்ற அளவில் இருக்கும். எனவே அதைவிட குறைவான இடைவெளியில் ஒரு பொருளை படம் எடுக்க மேக்ரோ லென்ஸ் என்ற ஒன்றைப் பயன்படுத்தினால்தான் பூக்கள், புழு பூச்சிகள் போன்றவற்றை அருகாமையில் தெளிவாக எடுக்க முடியுமாம். (லென்ஸ்கள் பொருத்தக்கூடிய காமிரக்களில்!).
பொதுவாக விலை ரொம்ப அதிகமாக இருக்கும் மேக்ரோ லென்ஸ்களை வாங்க முடியாத நிலையில் ஏற்கனவே இருக்கும் லென்ஸை முன்பக்கத்தை பின்பக்கமாக மாற்றி அதே போன்ற படங்களை எடுக்கலாம் என்று இங்கே படித்தேன். தொடர்ந்து என்னுடைய க்ளொசஃப் ஷாட்களை எடுத்து அவை எவ்வாறு விழுந்துள்ளன எனப்பார்த்தேன். எதிர்பார்க்காத வகையில் கீழே உள்ள படம் சிறப்பாக வந்திருந்தது.
ரோஜாவின் இதழ்கள் தெளிவாகத் தெரிவதுடன், இதழ்கள் மேல் படிந்துள்ள மழைத்துளிகள் குறைசொல்ல முடியாத அளவுக்கு வந்துள்ளன. இத்தனைக்கும், டிஜிட்டல் காமிராவில் இருக்கும் மேக்ரோ-மோட் (macro-mode)அல்லது ஃப்ளவர் மோடைக்(flower mode) கூட உபயோகிக்கவில்லை. அப்படி இருக்கையில் ரோஜாவிற்கு பின்புறம் இருக்கும் இலைகள் மற்றும் மண்-தரை அவுட்-ஆஃப் ஃபோகஸில் (ஒரு மாதிரி தெளிவில்லாமல் மயமய என்று தெரிவது) வந்திருப்பது ஆச்சரியம்! இந்த மேஜிக்கிற்கு காரணம் ஆட்டொமேடிக் ஃபோகஸ். டிஜிட்டல் காமிராவின் படம் எடுக்கும் பட்டனை (ஷட்டர் ரிலீஸ்) பாதி அளவு அமுத்திவிட்டு பின்னர் முழுமையாக எடுக்கும் நுட்பம். பாதி அமுக்குகையில் காமிரா எடுக்கவேண்டிய பொருளின் தூரம் அதன்மீது படும் ஒளி ஆகியவற்றை உணர்ந்து லென்சின் குவியத்தூரத்தையும் ஃபிளாஸ் போன்ற இதர காரணிகளையும் தேவைக்கேற்றபடி மாற்றி அமைக்கிறது. பின்னர் முழுமையாக அமுக்குகையில் படம் எதிர்பார்த்தபடி தெளிவாக பதிவாகிறது. இதையே மேக்ரோ மோடில் எடுத்திருந்தால் இன்னும் நல்ல படம் கிடைத்திருக்கும்.
படத்தில் எனக்குத் தெரிந்தே குறை ஒன்றும் உள்ளது. சரி,எல்லாத்தையும் நானே சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு என்ன வேலை? :-)
Wednesday, July 2, 2008
இரவில் நாயக்கர் மஹால்
இதில் நான் எடுத்த விதத்தில் ஒன்றும் சிறப்பு இல்லை. அக்காட்சி இயற்கையாகவே அழகாக அமைந்தது. சொல்லப்போனால் படம் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்து உள்ளது!(அவசரத்தால்)
மீனாட்சி கோயில் கோபுரம்
இடம் : மதுரை மீனாட்சி கோயில். (எந்த வாசல் என்று நினைவில்லை!)
நாள்: 27-08-2006
நுழைவு வாயிலின் சுவர் அல்லது தூண் பகுதிக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துள்ளேன். நணபனின் முகம் மிகச்சரியாக கோபுரத்தில் உள்ள பெரிய செவ்வக துளை போன்ற பகுதியில் பொருந்துமாறு எடுத்துள்ளேன்.
இனி உங்கள் விமர்சனத்திற்கு!! (ஆம், நண்பனின் முகத்தில் ஒளி விழுமாறு எடுத்திருக்க வேண்டும் :-))
Tuesday, July 1, 2008
புன்னகை!
இடம்: ஜலதாம ரிசார்ட்டில் ஓர் மூங்கில் வீடு. (மைசூர் அருகில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ளது
நாள்: 19-06-2006
காமிரா : டிஜிடல்-Cannot S410
கீழே உள்ளவாறு நண்பர்கள் போஸ் கொடுத்ததை எடுத்தபின்னர் எனக்கு தோன்றிய வித்தியாசமான கோணம்தான் மேலே கொடுத்துள்ளேன்!