Tuesday, July 1, 2008

புன்னகை!

எல்லோரையும் போலவும்தான் எனக்கும் நான் எடுத்த புகைப்படங்களை மற்றவர்களுக்கு காண்பிக்க ஆசை. பள்ளி ஆசிரியாரயிருந்த என் தந்தை பஸ்-பாஸுக்காக மாணவர்களை புகைப்படம் எடுப்பதற்காக காமிரா வாங்கினார். அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அப்போது தொடங்கியது ஆர்வம். இன்று வரை டெக்னிக்கலாக பெறிதாக எதுவும் கற்றுவிடவில்லையெனினும், நான் எடுத்த புகைப் படங்களில் வித்தியாசமானவை, நான்றாக இருப்பவை நான் நினைப்பதும் பிறர் சொன்னதுமான புகைப்படங்களை இங்கே பதியவிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் !


இடம்: ஜலதாம ரிசார்ட்டில் ஓர் மூங்கில் வீடு. (மைசூர் அருகில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ளது
நாள்: 19-06-2006
காமிரா : டிஜிடல்-Cannot S410

கீழே உள்ளவாறு நண்பர்கள் போஸ் கொடுத்ததை எடுத்தபின்னர் எனக்கு தோன்றிய வித்தியாசமான கோணம்தான் மேலே கொடுத்துள்ளேன்!



No comments:

Post a Comment