Thursday, January 29, 2009

uphill task என்பது இதுதானா?

நாங்கள் எப்படி இந்த மலைக்கு வந்தோம்? கீழே வெறும் பள்ளத்தாக்காக இருக்கிறதே? யாராவது ஹெலிகாப்டரில் அங்கோ கொண்டுபோய் இறக்கிவிட்டார்களா?

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்!)

இடம்: செம்பரா மலையுச்சிக்கு(2100 மீ) இட்டுச்செல்லும் பாதை, வயநாடு, கேரளா.
காலம்: ஆகஸ்ட்,2005

இல்லை. மலேயேறிதான் வந்தோம். கீழே நாங்கள் வந்த மலைகள் இருக்கின்றன. அனைத்தும் திரண்டு இருக்கும் மேகத்தால மூடப்பட்டுள்ளன. அது ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம். பாறையில் ஆணியடித்து அதில் கயிறு தொங்கவிட்டு ஏறவில்லையே தவிர பிற அனைத்து நுட்பங்களும் தேவைப்பட்டன. பல இடங்களில், பெரிதாக வளர்ந்திருக்கும் யானைப்புற்களைப் பற்றிக்கொண்டுதான் balance செய்ய முடிந்தது. படத்தில் உள்ள எமது குழுவினர் எங்களை வந்தடைவதற்காக காத்திருக்கிறோம். அவ்வப்போது பருவமழையின் சாரல்கள் வந்து நனைத்தபடி இருந்தன. இங்கே ஒரு ‘டீ’ கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்! என்ன செய்ய? பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாயிற்றே? இயற்கை எழிலை வேண்டுமட்டும் பருகினோம் :-)

பரங்கித்துரையின் சிலை

மும்பையில் உள்ள ஒரு பூங்கா(கஸ்தூர்பா பாங்-என்று நினைக்கிறேன்)வில் இந்த அற்புதமான சிலை உள்ளது. வெள்ளைக்கார துரை(? இல்லை ஏதேனும் மராட்டிய வீரரா?) மிடுக்காக குதிரை மீது அமர்ந்துள்ளார்.



(படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது சொடுக்கவும்!)

சிலை மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கிறதல்லவா? சிலையை வடித்தவன் யாரோ தெரியவில்லை!. இது உலோகச் சிலையா? அல்லது கற்சிலையா?

எந்த பிற்தயாரிப்பும் (post production) செய்யவில்லை. புகைப்படத்தின் கம்போசிஸன் நன்றாகவே வந்திருக்கிறது அல்லவா? வலது பக்கம் சிலையை அடுத்துள்ள இடைவெளி இடது பக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர! இனி நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்கள் கண்களுக்கும் கருத்துகளுக்கும் விட்டுவிட்டு விடை பெறுகிறேன்.

தாஜ் ஹோட்டல்

26/11 தாக்குதலுக்குப் பிறகு தாஜ் ஹோட்டலின் படம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருந்தது. நான் ஜூலை,2007-ல் சுற்றிப் பார்ப்பதற்காக மும்பை போயிருந்தேன். கேட் வே ஆப் இந்தியாவிற்கு அருகில் இருந்த அந்த கட்டிடம் தாஜ் ஹோட்டல் என்று அப்போது தெரியாது. ஏதோ ஒரு பழமையான கட்டிடம், பார்க்க அழகாக இருக்கிறதே என்று புகைப்படம் எடுத்தேன். அது எப்படி வந்துள்ளது என்றெல்லாம் பின்னர் யோசிக்கவில்லை. இப்பொழுது ஊடகங்களில் தாஜ் ஹோட்டலின் புகைப்படங்களை பார்த்தவுடன், நாம் எவ்வாறு எடுத்துள்ளோம் என்று பார்க்கத் தோன்றியது. தூசி தட்டி எடுத்த அந்த் புகைப்படம்தான் கீழே.


(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

என் நினைவில் இருப்பது சரியானால் இக்கட்டிடத்தை அதன் வாசலுக்கு நேராக நின்று கட்டிடம் முழுவதும் தெரியுமாறு எடுக்கமுடியாது. அப்படி எடுக்கவேண்டுமானால் கடலில் படகில் சென்றுதான் எடுக்க வேண்டியிருக்கும்!