Thursday, January 29, 2009

uphill task என்பது இதுதானா?

நாங்கள் எப்படி இந்த மலைக்கு வந்தோம்? கீழே வெறும் பள்ளத்தாக்காக இருக்கிறதே? யாராவது ஹெலிகாப்டரில் அங்கோ கொண்டுபோய் இறக்கிவிட்டார்களா?

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்!)

இடம்: செம்பரா மலையுச்சிக்கு(2100 மீ) இட்டுச்செல்லும் பாதை, வயநாடு, கேரளா.
காலம்: ஆகஸ்ட்,2005

இல்லை. மலேயேறிதான் வந்தோம். கீழே நாங்கள் வந்த மலைகள் இருக்கின்றன. அனைத்தும் திரண்டு இருக்கும் மேகத்தால மூடப்பட்டுள்ளன. அது ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம். பாறையில் ஆணியடித்து அதில் கயிறு தொங்கவிட்டு ஏறவில்லையே தவிர பிற அனைத்து நுட்பங்களும் தேவைப்பட்டன. பல இடங்களில், பெரிதாக வளர்ந்திருக்கும் யானைப்புற்களைப் பற்றிக்கொண்டுதான் balance செய்ய முடிந்தது. படத்தில் உள்ள எமது குழுவினர் எங்களை வந்தடைவதற்காக காத்திருக்கிறோம். அவ்வப்போது பருவமழையின் சாரல்கள் வந்து நனைத்தபடி இருந்தன. இங்கே ஒரு ‘டீ’ கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்! என்ன செய்ய? பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாயிற்றே? இயற்கை எழிலை வேண்டுமட்டும் பருகினோம் :-)

5 comments:

  1. It reminds me my old trekking days.
    If you trek in a mountain with fogs its awsome.

    ReplyDelete
  2. தங்கள் வலையும் அனுபவங்களும் அருமை.

    வாழ்த்துக்கள்.

    சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

    பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்

    ReplyDelete
  3. நீங்கள் ஆசைப் பட்டதைப் போல டீ சாப்பிடும் ஆசை எனக்கும் வரும் இயற்கையின் குளிரூட்டல்.
    இயற்கை எவ்வளவு பிரம்மண்டமான கொடையை அளித்தாலும், மனித மனம் அதைத் தனது சிறிய டீ கப் ஆசைகளாலேயே நிறைவு செய்யத் துடிக்கும் போல,இல்லையா சாணக்கியன்.
    உங்கள் தந்தையின் ஓவியங்களுக்குப் பின்னூட்டம் போட அனுமதி கிடைக்கவில்லை ஆதலால் இங்கே சொல்கிறேன்,அருமையான அழகிய சித்திரங்கள்.அவ்ருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  4. /* இயற்கை எவ்வளவு பிரம்மண்டமான கொடையை அளித்தாலும், மனித மனம் அதைத் தனது சிறிய டீ கப் ஆசைகளாலேயே நிறைவு செய்யத் துடிக்கும் போல */

    அற்புதமான உருவகம்...

    ஷண்முகப்ரியன், எனது தந்தையின் ஓவியங்கள் உள்ள பதிவிற்கு பின்னூட்டம் இடும் வசதியை செய்துவிட்டேன்.

    ReplyDelete