Thursday, January 29, 2009

தாஜ் ஹோட்டல்

26/11 தாக்குதலுக்குப் பிறகு தாஜ் ஹோட்டலின் படம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருந்தது. நான் ஜூலை,2007-ல் சுற்றிப் பார்ப்பதற்காக மும்பை போயிருந்தேன். கேட் வே ஆப் இந்தியாவிற்கு அருகில் இருந்த அந்த கட்டிடம் தாஜ் ஹோட்டல் என்று அப்போது தெரியாது. ஏதோ ஒரு பழமையான கட்டிடம், பார்க்க அழகாக இருக்கிறதே என்று புகைப்படம் எடுத்தேன். அது எப்படி வந்துள்ளது என்றெல்லாம் பின்னர் யோசிக்கவில்லை. இப்பொழுது ஊடகங்களில் தாஜ் ஹோட்டலின் புகைப்படங்களை பார்த்தவுடன், நாம் எவ்வாறு எடுத்துள்ளோம் என்று பார்க்கத் தோன்றியது. தூசி தட்டி எடுத்த அந்த் புகைப்படம்தான் கீழே.


(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

என் நினைவில் இருப்பது சரியானால் இக்கட்டிடத்தை அதன் வாசலுக்கு நேராக நின்று கட்டிடம் முழுவதும் தெரியுமாறு எடுக்கமுடியாது. அப்படி எடுக்கவேண்டுமானால் கடலில் படகில் சென்றுதான் எடுக்க வேண்டியிருக்கும்!

2 comments:

  1. தூசி தட்டி எடுத்தீர்களா அல்லது மவுசைத் தட்டி எடுத்தீர்களா? ;)

    ReplyDelete
  2. /*தூசி தட்டி எடுத்தீர்களா அல்லது மவுசைத் தட்டி எடுத்தீர்களா? ;)/*

    இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா என்ன செய்யறது! :-)

    ReplyDelete